செவ்வாய், 20 அக்டோபர், 2009

கவி

சிறு துளி பெருவெள்ளம்
உன் கூந்தல் துவட்டிய
பின்னும் தூறும் துளிகள்
எனக்கு

*
உன்னைக் காதலித்ததால் அல்ல
நீ என்னை காதலிக்காததால்தான்
ஆனேன் கவிஞனாய்....

*
விரும்பித்தான் காதலித்தேன் உன்னை
விரும்பாமல் காதலிதுக்கொண்டே
இருக்கிறது கவிதைகள் மட்டும் என்னை

*
நீ சூடும் பூவுக்கு எப்படி
கற்றுக்கொடுத்தாய் நீ
சிரிக்காத போதும் சிரிக்க

*
உன் கண்களில் படித்துவிட்டுத்தான்
வெளியிடுகிறேன் என் ஒவ்வொரு
கவிதைகளையும் பல கண்களுக்காய்

*
உன்னைக் காதலித்ததால்
தலைக்கனம் எனக்கு
நீ காதலிக்காததால்
தலைக்கனம் என்
கவிதைகளுக்கு

அம்மா

மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
"குடை எடுத்து போகவேண்டியதுதானே"
என்றார் அப்பா
"எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே"
என்றாள் அக்கா
தான் முந்தனையால் என் தலையை
துவட்டிகொண்டே
திட்டினால் அம்மா என்னையல்ல;
மழையை !"...

காத்திரிக்கிறேன்

உனக்கு காக்க வைப்பதில்
சுகமென்றால்
எனக்கு காத்திருப்பதில்
அதிக சுகம்

உன் தூக்கம் கலைக்க
விரும்பவில்லை
உன் தூக்கம் கலையும் வரை
காத்திருக்கத்தான்
விரும்பவில்லை

கவிதைக்காய்
காத்திருப்பதில்
கவிதை பிறப்பது
எனக்கு மட்டும்தான்

உனக்காய் காத்திருந்து என்
எழுத்துக்களுக்கு கால் வலிக்கிறது
தயவு செய்து வரும் போது
வெறும் கையோடு வந்துவிடாதே

என்னைக் காக்க வைத்து விட்டு
வரும் போது கவனம் நீந்த நேரிடலாம்
என் கவிதையின் கண்ணீரில்

இன்றாவது காதலைச் சொல்லத்தான்
தினமும் காத்திருப்பேன் இதுவரை
சொல்ல விட்டதில்லை காதல்

காதலனாகத்தான் காத்திருக்கிறேன்
கவிதையே காதல் கவிஞனாய்

கன நேரமாய் காத்திருந்தாலும்
நீ கேட்டால் ஏன்தான் சில நேரமாய் என்று
பொய் சொல்லுகிறேனோ

உனக்காய் காத்திருந்த இடத்தில்
நான் காணாமல் போயிருந்தால்
கவலைப்படாதே என் கால்களின்
கவிதைகளையாவது
விட்டுத்தான் போயிருப்பேன்

சனி, 4 ஏப்ரல், 2009

என்ன பண்றதுன்னே தெரியல

முதல் தடவ எழுத போறேன். என்ன எழுதறதுனே தெரியல.
ரொம்ப நாலா கதை எழுதனும்னு ஆசை இருந்தது. ஆனா டைம்
கிடைக்கல. வெட்டியாவே இருந்துட்டு இபோ திடிர்னு எதாவது செய்யனும்னா
முடியுமா?

வெளிநாட்டிற்கு இலவச செய்தி அனுப்புவதற்கு சில குறிப்புகள்

இந்தியாவில் இருந்தபடி தேசிய அளவில் (national) குறுஞ்செய்தித் தகவல்களை நண்பர்களுக்கும், உறவினர்களூக்கும் இலவசமாக அனுப்புவதற்குhttp://www.160by2.comhttp://www.way2sms.comதளங்களைப் பயன்படுத்துகிறோம்.அதேபோல சர்வதேச (international) அளவில் வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கும் தோழர் பெருமக்களுக்கும் SMS செய்திகளை இலவசமாக அனுப்ப உதவும் தளங்களை கீழே காண்போம்.நாம் யார், யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறோம் என்பதை தனி தரவுத்தளத்தில் பதிந்திருக்கிறார்கள். அதனால் அவற்றை நாம் கையாள்வது எளிமையாக்கப்பட்டுள்ளது.
http://www.sendsmsnow.com/register.php
http://smsdaak.com/Registration.aspx
http://gizmosms.com/
http://www.cherple.com/
http://www.txtdrop.com/